செல்லன் குலம் கொங்கு வெள்ளாளர்
குல வரலாறு
கொங்குநாட்டில் அனுமன்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லன். அனுமதை என்றும் அனும நகர் என்றும் செல்லன் குலக் காணிப் பாடலில் கூறியிருப்பதை வைத்து அனுமன்பள்ளியே (அனுமதை) செல்லன் பிறந்த ஊர் என்று அறியப்படுகிறது. கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் இருப்புலி என்ற ஊரில் செல்லன் குலத்தை சேர்ந்த இளையாக் கவுண்டருக்கு ஏழு ஆண்மக்கள் பிறந்தனர்.அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் வெவ்வேறு ஊர்களில் குடியேறினர். இருப்புலியில் ஒருவர் தங்கிவிட்டார்.
மற்றவர்கள் பருத்திப்பள்ளி, கொன்னையார், கோக்கலை, அனுமன்பள்ளி, எழுமாத்தூர், நஞ்சை இடையாறு ஆகிய ஊர்களில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஏழு பேரும் எழுகரைச் செல்லன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.
குல மக்கள் அருள்மிகு அழகுநாச்சியம்மன் – பருத்திப்பள்ளி
அருள்மிகு அத்தாயியம்மன் – இருப்புலி
அருள்மிகு பெரிய அம்மன், சின்ன அம்மன் – அனுமன்பள்ளி
அருள்மிகு செல்லியம்மன் – கொன்னையாறு
அருள்மிகு கொன்காளியம்மன் - கோக்கலை
அருள்மிகு ராஜா சுவாமி, அருள்மிகு ராசாயி அம்மன் – நஞ்சை இடையார்
அருள்மிகு பொன்காளியம்மன் – எழுமாத்தூர்
சீறு முறைகள் சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள்.
கொங்குவேள்ளாளர்களில் எழுதிங்கம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள்.
சான்றோர்கள் செல்லன் குலம் என்பது கொங்கு வேளாளர் கவுண்டர்களில் ஒரு உட்பிரிவாகும். இது அறுபது கூட்டங்களில் ஒன்றாகும். இந்த குலம் செல்லன் என்ற குலமுதல்வரின் பெயரால் வழங்கப்படுகிறது. செல்லன் குலத்தினர் கொங்கு மண்டலத்தில் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
Temple Location
Sri Selliamman Temple is located in Konnayar, a serene and spiritual place, perfect for worship and reflection.
Location
Konnayar, Kerala, India
Hours
9 AM - 7 PM


